மொழிபெயர்ப்புகள் [36]
English
- Bhikkhu Bodhi (2000)
- Bhikkhu Sujato
繁體字
- 丘哌博
- 岫廬
- 莊春江
日本語
- 関西パーリ語実習会 (2023)
Français
- Claude Le Ninan, Chandhana Le Ninan (2023)
- Rémy Zins (2022)
Deutsch
- Dr. Hellmuth Hecker (1993)
- Sabbamitta (2019)
Italiano
- Enzo Alfano
Español
- Anton P. Baron (2008–14)
Català
- Bernat Font
Português
- Michael Beisert (2008)
Русский
- o Dhamma.gift (2026)
- SV theravada.ru (2014)
Nederlands
- Bhikkhu Kuala Lumpur Dhammajoti (2008)
- Guy Eugène Dubois
- Peter van Loosbroek
Norsk
- Kåre A. Lie (2019)
Magyar
- Vekerdi József (1989)
Svenska
- Kerstin Jönhagen
Čeština
- Josef Marx
Slovenščina
- Ajahn Hiriko
Suomi
- Tae Hye Sunim
Türkçe
- Cem Şen (2024)
Lietuvių Kalba
- Sayalay Piyadassi (2022)
עִבְרִית
- Shai Schwartz (2004)
தமிழ்
- நவாலியூர் சோ. நடராசன்
বাংলা
- বঙ্গীস ভিক্ষু, অজিত ভিক্ষু, প্রজ্ঞাদর্শী ভিক্ষু (2018)
Việt Ngữ
- Thích Minh Châu
Bahasa Indonesia
- Indra Anggara
සිංහල
- A.P. de Zoysa
ပြန်သွားရန်
- Pitaka Myanmar Translation
ภาษาไทย
- Siam Rath
पाळिभासा (Pāli)
- Mahāsaṅgīti Tipiṭaka
குறிப்பு
- Sutta Central
புத்த பகவானின் முதல் உபதேசம்
இவ்வாறு நான் கேள்விப்பட்டேன். பகவான் ஒருமுறை வாரணாசிக்குச் (காசி) சமீபத்திலுள்ள இசிபத்தானத்திலுள்ள (ரிஷிகள் வசிப்பிடம்) மான் தோப்பில் வசித்தருளிய காலத்தில் ஐந்து பிக்குக் கூட்டத்தவர்க்கு உபதேசம் செய்தார்: 'பிக்குகளே, இல்லறத்தைத் துறந்து பரிவிராஜகனாகச் சென்ற துறவி, இந்த இரு தீவிர மார்க்கங்களையும் பின்பற்றக்கூடாது. இவ்விருமார்க்கங்கள் எவை? புலன்வருமின்பங்களில் ஈடுபட்டு அதில் மூழ்கி இருக்கிறார்கள். இது கீழானது, சாதாரணமானது, பொதுமக்கள் அனுசரிப்பது, தகுதியற்றது, பயனற்றது. மற்றது தன்னை ஒறுத்து கொடுந்தவஞ் செய்வது. இது துன்பந் தருவது, தகுதியற்றது, பயனில்லாதது.
இந்த இரு தீவிர மார்க்கங்களையும் கைவிட்டுத் ததாகதர் மத்தியவழியை உணர்ந்து கொண்டார். இது காட்சி தருவது. அறிவைக் கொடுப்பது, சாந்தியும் அகக்காட்சியும் உதவி, ஞானஒளி தந்து நிர்வாணத்துக்கு இட்டுச் செல்வது. இந்த நடுவழி என்ன? இதுவே ஆரிய அட்டாங்க மார்க்கம். அதாவது நற்காட்சி, நல்லூற்றம், நல்வாய்மை, நற்செயல், நல்ல ஜீவனோபாயம், நல்லூக்கம், நற்கடைப்பிடி, நல்லமைதி. ததாகதர் கண்ட மத்திய வழி இதுவே. இது காட்சிதருவது, அறிவைக் கொடுப்பது. சாந்தியும் அகக் காட்சியும் உதவி ஞானஒளி தந்து நிர்வாணத்துக்கு இட்டுச்செல்வது.
துக்கம் என்ற உயர் வாய்மை இதுவே. பிறப்பு துக்கம், மூப்பு துக்கம், பிணி துக்கம், சாக்காடு துக்கம், அவலக்கவலைக் கையாறு எல்லாம் துக்கமே. வேண்டாதாரோடு சேர்வது துக்கம், வேண்டியவரை விட்டுப் பிரிதல் துக்கம். விரும்பியதைப் பெறாவிட்டால் துக்கம். சுருக்கமாகக் கூறுவதானால் உபாதானப் பஞ்சக்கந்தமும் துக்கமே.
துக்க உற்பத்தி (துக்க சமுதய) என்ற உயர் வாய்மை இதுவே. இந்த வேட்கையே (திருஷ்ணா) புனர் சென்மத்தையும், புனர்பவத்தையும் உண்டுபண்ணுவது. அது காம ஆசைகளோடு பிணைந்திருக்கிறது. இங்கேயும் அங்கேயுமாகப் புதுப்புது இன்பங்களைக் காணுகிறது. இவை புலன் இன்பங்களில் வேட்கை, பவத்திலும் உயிர்வாழ வேண்டுமென்பதிலும் வேட்கை, தான் அழிந்துவிடவேண்டு மென்ற வேட்கை.
துக்க நிரோதம் (துக்கத்தை ஒழித்தல்) என்ற உயர் வாய்மை இதுவே. அந்த வேட்கையை முற்றாக ஒழித்தல். அதைக் கைவிடுதல், துறத்தல், அதிலிருந்து விடுதலை பெறுதல், அதனுடைய தொடர்பை விடுதல்.
துக்க நிரோத மார்க்கம் (துக்கத்தை ஒழிக்கும் மார்க்கம் ) என்ற உயர் வாய்மை இதுவே. அதாவது ஆரிய அட்டாங்க மார்க்கமே. அது நற்காட்சி, நல்லூற்றம், நல்வாய்மை, நற்செயல், நல்ல சீவனோபாயம், நல்லூக்கம், நற்கடைப்பிடி, நல்லமைதி என எட்டு.
- 'இது தான் துன்பமென்னும் உயர்வாய்மை' என்பது பற்றிய முன்னர் கேள்விப்படாத விடயங்கள் சம்பந்தமாக என்னகத்தில் காட்சி (கண்) உதயமானது, ஞானம் (அறிவு) உதயமானது, பஞ்ஞா (விசேட அறிவு) உதயமானது, வித்தியா (பகுத்தறிவு) உதயமானது, ஆலோகம் (ஒளி) உதயமானது.
- 'இந்த துக்கமென்னும் உயர்வாய்மை முற்ற முழுதாக அறியப்படல் வேண்டும்' என்பது பற்றிய முன்னர் கேள்விப்படாத விடயங்கள் சம்பந்தமாக என்னகத்தில் காட்சி (கண்) உதயமானது, ஞானம் (அறிவு) உதயமானது, பஞ்ஞா (விசேட அறிவு) உதயமானது, வித்தியா (பகுத்தறிவு) உதயமானது, ஆலோகம் (ஒளி) உதயமானது.
- 'இந்த துக்கமென்னும் உயர்வாய்மை முற்ற முழுதாக அறிந்து கொள்ளப்பட்டது' என்பது பற்றிய முன்னர் கேள்விப்படாத விடயங்கள் சம்பந்தமாக என்னகத்தில் காட்சி (கண்) உதயமானது, ஞானம் (அறிவு) உதயமானது, பஞ்ஞா (விசேட அறிவு) உதயமானது, வித்தியா (பகுத்தறிவு) உதயமானது, ஆலோகம் (ஒளி) உதயமானது.
- 'இது தான் துக்க சமுதயம் என்னும் உயர்வாய்மை' என்பது பற்றிய முன்னர் கேள்விப்படாத விடயங்கள் சம்பந்தமாக என்னகத்தில் காட்சி ... உதயமானது, ஞானம் ... பஞ்ஞா ... வித்தியா .... ஆலோகம் உதயமானது.
- 'இந்த துக்க சமுதயமென்னும் உயர்வாய்மை முற்றாக நீக்கப் படல் வேண்டும்' என்பது பற்றிய முன்னர் கேள்விப்படாத விடயங்கள் சம்பந்தமாக என்னகத்தில் காட்சி ... உதயமானது, ஞானம் ... பஞ்ஞா ... வித்தியா .... ஆலோகம் உதயமானது.
- 'இந்த துக்க சமுதயமென்னும் உயர்வாய்மை முற்றாக நீக்கப்பட்டது' என்பது பற்றிய முன்னர் கேள்விப்படாத விடயங்கள் சம்பந்தமாக என்னகத்தில் காட்சி ... உதயமானது, ஞானம் ... பஞ்ஞா ... வித்தியா .... ஆலோகம் உதயமானது.
- 'இது தான் துக்க நிரோதமென்னும் உயர்வாய்மை' என்பது பற்றிய முன்னர் கேள்விப்படாத விடயங்கள் சம்பந்தமாக என்னகத்தில் காட்சி ... உதயமானது, ஞானம் ... பஞ்ஞா ... வித்தியா .... ஆலோகம் உதயமானது.
- 'இந்த துக்க நிரோதமென்னும் உயர்வாய்மை முற்றாக அனுபூதியாக்கப்பட வேண்டும்' என்பது பற்றிய முன்னர் கேள்விப்படாத விடயங்கள் சம்பந்தமாக என்னகத்தில் காட்சி ... உதயமானது, ஞானம் ... பஞ்ஞா ... வித்தியா .... ஆலோகம் உதயமானது.
- 'இந்த துக்க நிரோதமென்னும் உயர்வாய்மை முற்றாக அனுபூதியாக்கப்பெற்றது' என்பது பற்றிய .... உதயமானது.
- 'இது தான் துக்க நிரோத மார்க்கம் என்னும் உயர் வாய்மை' என்பது பற்றிய .... உதயமானது.
- 'இந்த துக்க நிரோத மார்க்கமென்னும் உயர்வாய்மை முற்றாக பின்பற்றப்படல் வேண்டும்' என்பது பற்றிய .... உதயமானது.
- 'இந்த துக்க நிரோத மார்க்கம் என்னும் உயர்வாய்மை முற்றாக பின்பற்றப்பட்டது' என்பது பற்றிய முன்னர் கேள்விப்படாத விடயங்கள் சம்பந்தமாக என்னகத்தில் காட்சி ... உதயமானது, ஞானம் ... பஞ்ஞா ... வித்தியா .... ஆலோகம் உதயமானது.
இந்த மூன்று பண்புகள் பற்றியும் இந்தப் பன்னிரண்டு வழியிலும் நான்கு உயர் வாய்மைகள் பற்றி உண்மையான அறிவு தெளிவாயில்லாத வரை, பல தெய்வங்களையும் மாரர்களையும், பிரம்மாக்களையும், துறவிகளையும், அந்தணர்களையும், அரச குமாரர்களையும், மனிதரையும் கொண்டுள்ள உலகில் மிக உயர்ந்ததாகக் கருதப்படும் பூரண ஞான ஒளியை நான் பெற்றுவிட்டதாக உரிமை பாராட்டவில்லை.
நான்கு வாய்மைகள் சம்பந்தமான இந்த மூன்று பண்புகள் பற்றியும் 12 வழிகள் பற்றியும் உள்ள உண்மை அறிவின் காட்சி முற்றாகத் தெளிவானதும், பல தெய்வங்களையும் மாரர்களையும், பிரம்மாக்களையும், துறவிகளையும், அந்தணர்களையும், அரச குமாரர்களையும், மனிதரையும் கொண்டுள்ள உலகில் மிக உயர்ந்ததுமாகக் கருதப்படும் பூரண ஞான ஒளியை நான் பெற்றுவிட்டதாக உரிமை பாராட்டினேன். அப்போது உண்மையான அறிவின் காட்சி இவ்வாறு என்னகத்து எழுந்தது. என் உள்ளத்தில் உண்டான விடுதலை அசைக்கமுடியாதது. இதுவே கடைசிப் பிறப்பு. எனக்கு இனி புனர்ப்பவம் இல்லை.
இதை பகவான் கூறினார். ஐந்து பிக்குக் கூட்டத்தவரும் மகிழ்ந்து அவர் கூறிய வார்த்தைகளைக் கேட்டு ஆனந்தமடைந்தனர்.
மொழிபெயர்ப்புகள் [36]
English
- Bhikkhu Bodhi (2000)
- Bhikkhu Sujato
繁體字
- 丘哌博
- 岫廬
- 莊春江
日本語
- 関西パーリ語実習会 (2023)
Français
- Claude Le Ninan, Chandhana Le Ninan (2023)
- Rémy Zins (2022)
Deutsch
- Dr. Hellmuth Hecker (1993)
- Sabbamitta (2019)
Italiano
- Enzo Alfano
Español
- Anton P. Baron (2008–14)
Català
- Bernat Font
Português
- Michael Beisert (2008)
Русский
- o Dhamma.gift (2026)
- SV theravada.ru (2014)
Nederlands
- Bhikkhu Kuala Lumpur Dhammajoti (2008)
- Guy Eugène Dubois
- Peter van Loosbroek
Norsk
- Kåre A. Lie (2019)
Magyar
- Vekerdi József (1989)
Svenska
- Kerstin Jönhagen
Čeština
- Josef Marx
Slovenščina
- Ajahn Hiriko
Suomi
- Tae Hye Sunim
Türkçe
- Cem Şen (2024)
Lietuvių Kalba
- Sayalay Piyadassi (2022)
עִבְרִית
- Shai Schwartz (2004)
தமிழ்
- நவாலியூர் சோ. நடராசன்
বাংলা
- বঙ্গীস ভিক্ষু, অজিত ভিক্ষু, প্রজ্ঞাদর্শী ভিক্ষু (2018)
Việt Ngữ
- Thích Minh Châu
Bahasa Indonesia
- Indra Anggara
සිංහල
- A.P. de Zoysa
ပြန်သွားရန်
- Pitaka Myanmar Translation
ภาษาไทย
- Siam Rath
पाळिभासा (Pāli)
- Mahāsaṅgīti Tipiṭaka
குறிப்பு
- Sutta Central
புத்த பகவானின் முதல் உபதேசம்
விமர்சனங்கள் [1]
English