மேலேற்று

The Minor Discourses

Snp1.12 முனி சூத்திரம்: முனிவர்

மொழிபெயர்ப்புகள் [20]

முனி சூத்திரம்: முனிவர்

நெருங்கிய நட்பிலிருந்து பிறப்பது அபாயம்,
சமுதாயத்திலிருந்து பிறப்பது குப்பை.
நெருங்கிய நட்புகளிலிருந்து விடுபடுதல்,
சமுதாயத்திலிருந்து விடுபடுதல்,
இதுவே முனிவர் ஞானத்தால் உணர்வது.

அவர், வளர்ந்ததை வெட்டி விடுவார்
திரும்ப விளைவிக்க மாட்டார்
வளர்வதற்கும் ஊக்கமளிக்க மாட்டார்:
அவரை தனித்து நடமாடும்
முனிவர் என்பார்.
அமைதியைக் கண்டவர் அவர்.

நிலத்தைக் கவனித்து,
விதையை நொறுக்கி,
மேலும் ஜீவசத்துக்கு ஊக்கமளிக்காதவர்
—உண்மையான முனிவர்—
பிறப்பின் முடிவறிந்தவர்—
கருத்துக்களைக் கைவிட்டவர்
அவரை அளவிட முடியாது.

எல்லா இருப்பிடங்களையும் தெரிந்தவர்,
யாருக்கும் எங்கேயும் அவர் ஏங்குவதில்லை,
—உண்மையான முனிவர்—
வேட்கையில்லாமல், அவா இல்லாமல்.
அவர் கட்டுவதில்லை,
ஏனென்றால் அவர் அக்கரை சேர்ந்து விட்டார்.

எல்லாம் வென்றவர்
எல்லாம் தெரிந்தவர்,
மெய்ஞ்ஞானம் உடையவர்.
எந்த விதத்திலும் கறைபடியாதவர்,
எல்லாம் துறந்தவர்
வேட்கையை முடித்ததனால்,
விடுபட்டவர்:
ஞானிகள் அவரை முனிவர் என்பார்.

விவேகத்தில் வலுவானவர்,
நடத்தையில் ஒழுக்கம்,
நிலையானவர்,
ஆழ் தியானத்தில் மகிழ்பவர்,
கடைப்பிடியுடையவர்,
பற்றுகளிடமிருந்து விடுபட்டவர்,
அவரைத் தடுப்பதற்கு ஒன்றும் இல்லை : மாசுகள் இல்லை.
ஞானிகள் அவரை முனிவர் என்பார்.

தனித்து நடமாடும் முனிவர்,
தற்பெருமை கொள்ளாதவர்,
புகழ்ச்சியும் இகழ்ச்சியும்
அவரைப் பாதிப்பதில்லை.
எதற்கும் அதிர்ச்சி அடையாமல்,
சத்தம் கேட்ட சிங்கத்தைப்போல.
எதற்கும் பிடிபடாமல், வலையில் சிக்காத காற்றைப்போல.
கறைபடாமல், [சேற்று] நீரில் உள்ள தாமரையைப்போல
மற்றவருக்குத் தலைவர்,
மற்றவர் தலைமையில் நடப்பவரல்ல:
ஞானிகள் அவரை முனிவர் என்பார்.

குளிப்பிடத்தில் உள்ள தூணைப்போல,
மற்றவர் இரு எல்லைகளில் பேசும் போது
புலன் ஆசை இல்லாத அவர்,
அவர் புலன்களை அடக்கியவர்:
ஞானிகள் அவரை முனிவர் என்பார்.

நெசவுநாடா நேராகச் செல்வதுபோல நேர்மையுள்ளவர்,
தீய செயல்களை அவர் செய்வதில்லை.
சமசுருதி உடையது எது, அல்லாதது எது என்று பிரதிபலிப்பார்:
ஞானிகள் அவரை முனிவர் என்பார்.

தன் மனத்தை அடக்கியவர்,
அவர் தீமை செய்வதில்லை.
இளமையும் நடுத்தரமானவரும்,
கட்டுப்பாடுள்ள முனிவர்,
கோபிப்பதும் இல்லை, மற்றவரைக் கோபமூட்டுவதும் இல்லை:
ஞானிகள் அவரை முனிவர் என்பார்.

சிறந்த, நடுத்தரமான, மிஞ்சிய
உணவை ஏற்றுக் கொள்வார்.
மற்றவர் கொடுத்ததைப் பெற்று உயிர் வாழ்கிறார்,
போற்றாமலும்,
இகழாமலும்;
ஞானிகள் அவரை முனிவர் என்பார்.

நாடோடி முனிவர்
பிரமச்சரிய வாழ்வு வாழ்கிறார்,
இளமையிலும் ஒருவரிடமும் கட்டுப்படாமல்,
போதையைத் தவிர்த்து
தற்பெருமை கொள்ளாமல்
முழுமையாக விலகியவர்:
ஞானிகள் அவரை முனிவர் என்பார்.

உலகைத் தெரிந்தவர்,
மேலான நோக்கத்தைப் பார்த்தவர்,
கடலைக் கடந்து, வெள்ளத்தைக் கடந்து,
—அவ்வாறு—
சங்கிலிகளை உடைத்தவர்,
பற்றில்லாதவர்,
மாசுகள் படியாதவர்:
ஞானிகள் அவரை முனிவர் என்பார்.

இவை இரண்டும் வேறுபட்டவை,
வேவ்வேறு இடங்களில் வாழ்பவை:
மனைவிக்கு ஆதரவளிக்கும் இல்லறத்தார்
நல்ல பழக்கங்கள் கொண்ட சுயநலமில்லாதவர்.
உயிர்களைக் கொல்லும் இல்லறத்தாருக்குக்
கட்டுப்பாடுகள் இல்லை.
மற்ற உயிர்களைத்
தொடர்ந்து பாதுகாக்கும் முனிவரோ
கட்டுப்பாட்டோடு இருப்பவர்.

கிரீடம் கொண்ட
நீலக் கழுத்துள்ள மயில்,
பறக்கும்போது
காட்டு வாத்துக்கு
வேகத்தில் இணையாகாது:
அதே போல இல்லறத்தார்
முனிவருடன் தொடர முடியாது,
தனித்திருக்கும் முனிவர், வனத்தில்
ஆழ் தியானத்தில் திகழ்கிறார்.

விமர்சனங்கள் [1]